< Back
சினிமா செய்திகள்
Video song Ringu Chaku from Hitler released
சினிமா செய்திகள்

ஹிட்லர் படத்தின் 'ரிங்கு ஜக்கு' வீடியோ பாடல் வெளியானது

தினத்தந்தி
|
22 Sept 2024 1:29 PM IST

முன்னதாக ஹிட்லர் படத்தின் 'டப்பாஸ்' மற்றும் `அடியாத்தி' ஆகிய பாடல்கள் வெளியாகி வைரலாகின.

சென்னை,

நடிகர் விஜய் ஆண்டனி 'ரோமியோ', 'மழைப்பிடிக்காத மனிதன்' திரைப்படங்களை தொடர்ந்து, தற்போது, 'படைவீரன்', 'வானம் கொட்டட்டும்' உள்ளிட்ட படங்களை இயக்கிய தனா இயக்கத்தில் 'ஹிட்லர்' என்கிற புதிய படத்தில் நடித்துள்ளார்.

ரியா சுமன் கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் சரண்ராஜ் ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில், தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டிரெய்லர் வெளியானநிலையில், 'டப்பாஸ்' `அடியாத்தி' ஆகிய பாடல்களும் வெளியாகி வைரலாகின.

இந்நிலையில், விவேக் - மெர்வின் இசையமைத்துள்ள இப்படத்திலிருந்து 'ரிங்கு ஜக்கு' வீடியோ பாடல் வெளியாகி உள்ளது. தற்போது இந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படம் வரும் 27-ம் தேதி திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்