'சபா நாயகன்' படத்தின் வீடியோ பாடல் வெளியீடு..!
|'சபா நாயகன்' திரைப்படம் கடந்த 22-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது.
சென்னை,
இயக்குனர் சி.எஸ்.கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன் நடிப்பில் கடந்த 22-ந்தேதி வெளியான திரைப்படம் 'சபா நாயகன்'. இந்த படத்தில் மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன், சாந்தினி சவுத்ரி, மயில்சாமி, மைக்கேல் தங்கதுரை, உடுமலை ரவி, அருண் குமார், ஜெய்சீலன் சிவராம், ஸ்ரீராம் கிரிஷ், ஷெர்லின் சேத், விவியாசாந்த், அக்சயா ஹரிஹரன், துளசி சிவமணி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு பாலசுப்ரமணியம், தினேஷ் புருஷோத்தமன், பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்துள்ளனர். கணேஷ் சிவா படத்தொகுப்பு செய்துள்ளார். திரையரங்குகளில் 'சபா நாயகன்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள 'ஆல் டைம் ஹேப்பி' என்ற பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ பாடலை நடிகர் துல்கர் சல்மான் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.