'வாரிசு' படத்தின் தீ தளபதி பாடல் வீடியோ வெளியீடு
|இப்பாடலின் வீடியோ தற்போது யூடியூப்பில் வெளியாகியுள்ளது
சென்னை,
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் 'வாரிசு'. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
பெரும் எதிர்பார்ப்பில் உருவான இப்படம் கடந்த 11-ஆம் தேதி ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் தெலுங்கு பதிப்பான 'வாரசுடு' கடந்த 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் தீ தளபதி லிரிக்கல் விடியோ 5.8 கோடி பார்வைகளை கடந்துள்ளது. நடிகர் சிம்பு இந்தப் பாடலை பாடியுள்ள இப்பாடலின் வீடியோ தற்போது யூடியூப்பில் வெளியாகியுள்ளது.
The much-awaited #TheeThalapathy video song is out now
— TheRoute (@TheRoute) February 5, 2023
▶️ https://t.co/axgbgfI1IP#Thalapathy @actorvijay sir @directorvamshi @SilambarasanTR_ sir @iamRashmika @MusicThaman @Lyricist_Vivek @AlwaysJani @7screenstudio @TSeries #MegaBlockbusterVarisu