< Back
சினிமா செய்திகள்
முட்டாள்கள் நாளன்று வந்திருக்கிறீர்களே: நடிகர் அஜித் கிண்டல்
சினிமா செய்திகள்

"முட்டாள்கள் நாளன்று வந்திருக்கிறீர்களே": நடிகர் அஜித் கிண்டல்

தினத்தந்தி
|
2 April 2024 3:38 PM IST

நடிகர் அஜித்குமாரின் புதிய வீடியோ வைரலாகி வருகிறது.

சென்னை,

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடித்து வருகின்றார். இப்படத்தை தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ்த்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

மேலும் இப்படத்தில் அர்ஜுன், ஆரவ், ரெஜினா, சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இதன் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அஜர்பைஜானில் தொடங்கியது. படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் அங்கு நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

விடாமுயற்சி படத்திற்குப் பின் நடிகர் அஜித், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 'குட் பேட் அக்லி' படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த திரைப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளார் . மேலும் 'குட் பேட் அக்லி' படம் 2025 பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் 'குட் பேட் அக்லி' படத்தில் அவர் 3 வேடங்களில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் 2006 -ம் வெளியான வரலாறு படத்தில் அஜித் மூன்று வேடங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தற்போது மீண்டும் அஜித் மூன்று ரோலில் நடிப்பது ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பதை எகிற செய்துள்ளது.

இதற்கிடையே, உடல்நலம் பாதிக்கப்பட்ட அஜித் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நலமானதும் மீண்டும் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்து அசத்துகிறார். இந்த நிலையில், நேற்று (ஏப்ரல் 1) நடிகர் அஜித், இருசக்கர வாகன நிறுவனத்தில் பணியாற்றும் ரசிகர்களைச் சந்தித்தார். அதில், சிலர் அவரிடம் கையொப்பம் பெற்றனர்.

அப்போது, அஜித் "சரியாக முட்டாள்கள் நாளன்று வந்திருக்கிறீர்களே" எனக் கிண்டலாகக் கூறினார். இதைக் கேட்ட அனைவரும் சிரித்தனர். தற்போது, இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்