< Back
சினிமா செய்திகள்
விறுவிறுப்பாக நடைபெறும் விடாமுயற்சி படப்பிடிப்பு... மீண்டும் அஜர்பைஜான் பறந்த நடிகர் அஜித்...!
சினிமா செய்திகள்

விறுவிறுப்பாக நடைபெறும் விடாமுயற்சி படப்பிடிப்பு... மீண்டும் அஜர்பைஜான் பறந்த நடிகர் அஜித்...!

தினத்தந்தி
|
30 Nov 2023 5:58 PM IST

விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சென்னை,

இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கும் திரைப்படம் 'விடாமுயற்சி'. இப்படத்தில் அஜித் கதாநாயகனாக நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் ஹாலிவுட் தரத்தில் உருவாக்கப்படவுள்ளதால் படப்பிடிப்பு முழுவதும் அஜர்பைஜான் நாட்டிலேயே நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் 'விடாமுயற்சி' கலை இயக்குனர் மிலன் மாரடைப்பினால் அஜர்பைஜான் நாட்டில் உயிரிழந்தார். இது திரைத்துறையில் மிகப்பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தற்போது இந்த படத்தின் கலை இயக்குனராக அவரது மனைவி மரியா மெர்லின் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியது.

இதற்கிடையே கடந்த 24ந் தேதி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த காரணத்தால் சிறிய இடைவெளிக்காக நடிகர் அஜித் சென்னை திரும்பினார். இந்நிலையில் இன்று இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக தற்போது மீண்டும் நடிகர் அஜித்குமார் அஜர்பைஜான் புறப்பட்டு சென்றுள்ளதாக தகவல் வெளியாக உள்ளது.

மேலும் செய்திகள்