அஜித்தின் 'விடாமுயற்சி' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
|நடிகர் நிகில் நாயர் போஸ்டரை ‘விடாமுயற்சி’ படக்குழு வெளியிட்டுள்ளது.
சென்னை,
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். மகிழ்த்திருமேனி இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் 'விடாமுயற்சி' வெளியாகிறது. சமீபத்தில் அஜர்பைஜானில் நடந்துவந்த 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு முடிந்ததாக படக்குழு தெரிவித்தது. அதனைத்தொடர்ந்து, இப்படத்தின் போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகி வைரலாகி வருகின்றன.
இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்க வில்லனாக அர்ஜுன் நடிக்கிறார். கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வந்த நிலையில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படம் இன்னும் ஓரிரு நாட்களில் நிறைவடைய இருக்கிறது. அதே சமயம் அஜித், குட் பேட் அக்லி திரைப்படத்திலும் கமிட் ஆகியுள்ள நிலையில் இதன் படப்பிடிப்பும் தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் விடாமுயற்சி படமானது தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
இதற்கிடையில் அஜித், திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா ஆகியோர்களின் போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகின. இந்நிலையில் நடிகர் நிகில் நாயர் போஸ்டரை விடாமுயற்சி படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகின்றது.