< Back
சினிமா செய்திகள்
மகள் திருமணத்தை கோலாகலமாக நடத்திய தெலுங்கு நடிகர் வெங்கடேஷ்
சினிமா செய்திகள்

மகள் திருமணத்தை கோலாகலமாக நடத்திய தெலுங்கு நடிகர் வெங்கடேஷ்

தினத்தந்தி
|
16 March 2024 9:45 PM IST

டோலிவுட் நடிகர் வெங்கடேஷ் தனது இரண்டாவது மகள் திருமணத்தை கோலாகலமாக நடத்தியுள்ளார். திருமண நிகழ்வின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தெலுங்கில் முன்னணி தயாரிப்பாளர் ராமா நாயுடுவின் மகன் நடிகர் வெங்கடேஷ் . அதிகப் படங்களை தயாரித்ததற்காக ராமா நாயுடு கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றவர். தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் வெங்கடேஷ்க்கு மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மூத்த மகளின் திருமணம் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில் இரண்டாவது மகள் ஹயாவாகினி திருமணம் நேற்று ஹைதராபாத்தில், ராமா நாயுடு ஸ்டுடியோவில் கோலகலமாக நடந்துள்ளது.

ஹயாவாகினி நிஷாந்த் என்பவரைத் திருமணம் செய்துள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விஜயவாடாவில் இந்த ஜோடியின் திருமண நிச்சயம் நடந்தது.

இந்தத் திருமண நிகழ்வில் நடிகர்கள் மகேஷ்பாபு, சிரஞ்சீவி என டோலிவுட்டைச் சேர்ந்த பல பிரபலங்களும் நெருங்கிய உறவினர்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்களும் இந்த ஜோடிக்குத் தங்கள் வாழ்த்துகளைச் சொல்லி வருகின்றனர்.

மேலும் செய்திகள்