'வேட்டையன்': பகத் பாசில் கதாபாத்திரம் குறித்து பகிர்ந்த ரஜினிகாந்த்
|'வேட்டையன்' படத்தில் பகத் பாசில் பேட்ரிக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
சென்னை,
ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், மஞ்சு வாரியர், பகத் பாசில், ராணா டகுபதி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் 'வேட்டையன்'. இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று இதுவாகும்.
அதன்படி, வரும் 10-ம் தேதி இப்படம் வெளியாக உள்ளநிலையில், படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் ரஜினிகாந்த், பகத் பாசிலின் கதாபாத்திரம் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
இது குறித்து அவர் கூறுகையில், ' பகத் பாசில் இப்படத்தில் ஒரு சுவாரஸ்யமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த கதாபாத்திரத்தை பற்றி படக்குழு என்னிடம் சொன்னபோது, இந்த கதாபாத்திரத்திற்கு யாரை நடிக்க வைப்பார்கள் என்று சிந்தித்தேன். அப்போது இயக்குனர், 'இதற்காக அதிகம் யோசிக்க தேவையில்லை, இந்த கதாபாத்திரத்திற்கு பகத் பாசில் மட்டுமே சரியாக இருப்பார்' என்றார்
ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் சூப்பர் ஸ்டார் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்துள்ளார். பகத் பாசில் பேட்ரிக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ரஜினிகாந்த் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'கூலி' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன், சவுபின் ஷாஹிர், சத்யராஜ் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.