< Back
சினிமா செய்திகள்
vettaiyan: Fahadh Faasil on dubbing
சினிமா செய்திகள்

'வேட்டையன்': டப்பிங் பணியில் பகத் பாசில்

தினத்தந்தி
|
7 July 2024 1:48 PM IST

'வேட்டையன்' படத்தின் டப்பிங் பணியை பகத் பாசில் தொடங்கியுள்ளார்.

சென்னை,

ரஜினிகாந்த் தனது 170-வது படமான 'வேட்டையன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். லைகா தயாரிக்கும் இப்படத்தை ஜெய் பீம் பட இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கியுள்ளார். இப்படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. இதில், அமிதாப்பச்சன், பகத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகாசிங் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் தொடங்கி, சென்னை, மும்பை, திருநெல்வேலி, பாண்டிச்சேரி எனப் பல்வேறு பகுதிகளில் நடந்தது. கடைசியாக பாண்டிச்சேரியில் ஒரு சண்டை காட்சி படமாக்கப்படுவதாகவும் அதற்காக ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், இப்படத்தின் டப்பிங் பணியை பகத் பாசில் தொடங்கியுள்ளார். இது குறித்தான புகைப்படங்களை படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

மேலும் செய்திகள்