< Back
சினிமா செய்திகள்
வேட்டையன் படத்தின் முதல் நாள் வசூல்
சினிமா செய்திகள்

'வேட்டையன்' படத்தின் முதல் நாள் வசூல்

தினத்தந்தி
|
11 Oct 2024 4:03 PM IST

‘வேட்டையன்’ திரைப்படம் வெளியான முதல் நாளில் ரூ.25 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை,

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருந்த வேட்டையன் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. ஜெய் பீம் படத்திற்குப் பிறகு இயக்குநர் ஞானவேல் இயக்கியிருந்த இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வந்தது.

அதே சமயம் 33 வருடங்களுக்கு முன்பாக ஹம் என்ற இந்தி படத்தில் இணைந்திருந்த ரஜினி மற்றும் அமிதாப் கூட்டணி, மீண்டும் இணைந்துள்ளதும் படத்தின் மற்றொரு எதிர்பார்ப்புக்கு காரணம். இதில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்தும், என்கவுன்டரை எதிர்க்கும் வழக்கறிஞராக அமிதாப் பச்சனும் நடித்துள்ளனர். இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார்களான இவர்கள் இருவரும் நடித்திருப்பதால் இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அடுத்தது பகத் பாசில், ராணா, மஞ்சு வாரியர் உள்ளிட்ட பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இந்த படம் கல்வி முறையில் உள்ள ஓட்டைகள் குறித்தும் போலி என்கவுண்டர் குறித்தும் பேசுகிறது.

இந்நிலையில் இந்த படம் முதல் நாளில் மட்டும் கிட்டத்தட்ட 25 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆயுத பூஜை விடுமுறை நாட்கள் என்பதால் இனிவரும் நாட்களிலும் படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படம், உலகளவில் சுமார் ரூ.70 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாகவும், தமிழகத்தில் மட்டும் சுமார் 22 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோட் திரைப்படம் முதல்நாளில் ரூ.44 கோடியும் ஜெயிலர் திரைப்படம் முதல்நாளில் ரூ. 48 கோடியும் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்