< Back
சினிமா செய்திகள்
வெற்றிமாறனின் புதிய வெப் தொடர் - ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் பகிர்ந்த தகவல்
சினிமா செய்திகள்

வெற்றிமாறனின் புதிய வெப் தொடர் - ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் பகிர்ந்த தகவல்

தினத்தந்தி
|
8 Dec 2022 5:30 AM IST

இயக்குனர் வெற்றிமாறனுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழின் முன்னனி இயக்குனர்களில் ஒருவரான வெற்றிமாறன், தற்போது 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார். இதனை தொடர்ந்து நடிகர் சூர்யா நடிக்கும் 'வாடிவாசல்' படத்தை வெற்றிமாறன் இயக்க உள்ளார்.

இதனிடையே பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், வெற்றிமாறன் அடுத்ததாக ஒரு வெப் தொடரை எழுதி, அதனை தயாரிக்க உள்ளதாகவும், அதில் தான் பணியாற்ற உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே வெற்றிமாறன் தயாரித்த பேட்டைக்காளி வெப் தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


My next project will be with Director#Vetri Maaran .
It will be for a web serial written and show run by him for #Zee5.
Major cast & other details will be announced soon .

— pcsreeramISC (@pcsreeram) December 6, 2022 ">Also Read:


மேலும் செய்திகள்