< Back
சினிமா செய்திகள்
வெற்றிமாறன் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர்
சினிமா செய்திகள்

வெற்றிமாறன் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர்

தினத்தந்தி
|
21 Sept 2024 4:51 PM IST

வெற்றிமாறன் - ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து பணிபுரிய இருப்பது உறுதியாகி இருக்கிறது.

சென்னை,

நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் தனது 30-வது படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கும் இப்படத்துக்கு 'தேவரா பாகம்-1' என்று பெயரிடப்பட்டுள்ளது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்துள்ளார். வருகிற 27-ந் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளநிலையில், படக்குழு புரொமோசன் பணிகளில் ஈடுபட்டுள்ளது.

'தேவரா' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் ஜூனியர் என்டிஆர் பேசியதாவது "சென்னையில்தான் நான் குச்சுப்புடி கற்றுக் கொண்டேன் என்பது பலருக்கும் தெரியாது. 'தேவரா' எந்தளவுக்கு எனக்கு ஸ்பெஷல் என்பதை வார்த்தையில் விவரிக்க முடியாது. நாம் மொழியால் பிரிந்திருக்கிறோம். ஆனால் சினிமாவால் அல்ல. இனி பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என்று நம்மை பிரிக்க முடியாது. எனக்கு மிகவும் பிடித்த வெற்றிமாறனுடன் சேர்ந்து ஒரு படம் பண்ண வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். நேரடியாக தமிழில் நடித்து அதை தெலுங்கில் டப்பிங் செய்ய வேண்டும்" இவ்வாறு ஜூனியர் என்டிஆர் தெரிவித்தார்.

இதனிடையே, சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார் வெற்றிமாறன். அவரிடம் ஜூனியர் என்.டி.ஆர் அளித்த பதில் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு வெற்றிமாறன் "நான் அவரை ஏற்கெனவே சந்தித்து பேசியிருக்கிறேன். ஒரு கதையின் ஐடியா குறித்து பேசியிருக்கிறோம். இருவருமே எங்களுடைய பணிகள் முடித்தவுடன் இணைந்து பணிபுரிவோம்" என்று தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் வெற்றிமாறன் - ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து பணிபுரிய இருப்பது உறுதியாகி இருக்கிறது

மேலும் செய்திகள்