'வாடிவாசல்': வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த வெற்றிமாறன்
|'வாடிவாசல்' குறித்து பரவிய வதந்திகளுக்கு வெற்றிமாறன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
சென்னை,
முன்னதாக இயக்குனர் வெற்றிமாறன் சூர்யாவை வைத்து 'வாடிவாசல்' படத்தை இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. வி.கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி தாணு தயாரிக்கும் இப்படம் ஜல்லிக்கட்டு விளையாட்டை மையமாக வைத்து தயாராக உள்ளது. அதன் பின்னர், படம் தொடர்பான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
சூர்யாவும், கங்குவா, சூர்யா 44 என அடுத்தடுத்த படங்களில் பிஸியானார். இதனால், வாடிவாசல் கைவிடப்பட்டதாக இணையத்தில் வதந்திகள் பரவின. இதனையடுத்து வெற்றிமாறன், விடுதலை 2 முடிந்ததும் வாடிவாசல் தொடங்கும் என்று கூறியிருந்தார்.
இருந்தும், மீண்டும் படம் தொடர்பான வதந்திகள் பரவ ஆரம்பித்தன. இந்நிலையில், வதந்திகளுக்கு வெற்றிமாறன் மீண்டும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், 'வாடிவாசல் படம் குறித்து பரவி வரும் வதந்திகள் பற்றி நன்கு தெரியும். வாடிவாசல் என் வரிசையில் உள்ளது. விடுதலை 2 படப்பிடிப்பு முடிந்ததும் தொடங்குவேன்', என்றார். இதனையடுத்து ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.