< Back
சினிமா செய்திகள்
ராயன் படத்தில் தனுஷின் இயக்கம் குறித்து வெற்றிமாறன் கருத்து
சினிமா செய்திகள்

'ராயன்' படத்தில் தனுஷின் இயக்கம் குறித்து வெற்றிமாறன் கருத்து

தினத்தந்தி
|
18 Aug 2024 6:52 PM IST

சமீபத்தில் வெளியான 'ராயன்' படத்தினை நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ளார்.

சென்னை,

நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருந்த 'ராயன்' திரைப்படம் கடந்த மாதம் 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்த இந்த படத்தில் தனுஷுக்கு தம்பிகளாக காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷனும், தங்கையாக துஷாரா விஜயனும் நடித்திருந்தனர். எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்துள்ளார்.

'ஏ' சான்றிதழுடன் திரைக்கு வந்து முதல் நாளில் அதிக வசூல் செய்த முதல் தமிழ்படம் என்ற பெருமையைப் இப்படம் பெற்றுள்ளது. இதுவரை தனுஷ் நடித்து வெளியான படங்களில் முதல் நாள் வசூலில் 'ராயன்' திரைப்படம்தான் அதிகம். மேலும், இப்படமானது உலகளவில் ரூ.150 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தநிலையில் இயக்குனர் வெற்றிமாறன் சமீபத்திய பேட்டி ஒன்றில், தனுஷ் எவ்வாறு இயக்குனராக வலம் வருகிறார் என்பது பற்றி பேசியுள்ளார். அதில் "இது ஒரு இயல்பான முன்னேற்றம் என்று நான் நினைக்கிறேன், ஏனென்றால் அவர் இயக்குனர்களைச் சுற்றி வளர்ந்தவர். "அவரது தந்தை ஒரு இயக்குனர், அவரது சகோதரர் ஒரு இயக்குனர், அவருக்கும் வேகமாக கற்கும் புத்திசாலித்தனம் உள்ளது. எனவே, அவர் இயக்குனராக மாறுவது மிகவும் இயல்பானது என்று நான் நினைக்கிறேன்," என்று கூறினார். மேலும் ராயன் படத்தினை தனுஷ் அருமையாக இயக்கி நடித்துள்ளார் என்று கூறியுள்ளார்.

மேலும், வடசென்னை 2 விரைவில் வரும் என்றும், சூர்யா நடிக்கும் வாடிவாசலும் அவரது அடுத்த படமாக இருக்கும் என்றும் இயக்குனர் வெற்றிமாறன் கூறியுள்ளார். இதற்கிடையில் நடிகர் தனுஷ் அடுத்த படமான 'குபேரா' படத்தில் நடிகர்கள் நாகார்ஜுனா அக்கினேனி மற்றும் ராஷ்மிகா மந்தனாவுடன் இணைந்து நடித்து வருகிறார்.

மேலும் செய்திகள்