< Back
சினிமா செய்திகள்
பழம்பெரும் நடிகர் மருத்துவமனையில் அனுமதி - ரசிகர்கள் அதிர்ச்சி
சினிமா செய்திகள்

பழம்பெரும் நடிகர் மருத்துவமனையில் அனுமதி - ரசிகர்கள் அதிர்ச்சி

தினத்தந்தி
|
23 Sept 2024 10:57 AM IST

உடல்நலக்குறைவு காரணமாக பழம்பெரும் நடிகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொல்கத்தா,

மேற்குவங்காளத்தை சேர்ந்த பழம்பெரும் நடிகர் மனோஜ் மித்ரா (வயது 85). இவர் பஞ்சராமர் பாகன், கரே பைரே, கணசத்ரு உள்பட பல்வேறு திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார்.

இந்நிலையில், மனோஜ் மித்ரா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூச்சுத்திணறல், வயது முதிர்வு உள்பட பல்வேறு உடல்நலப்பிரச்சினை தொடர்பாக மித்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை மோசமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். பழம்பெரும் நடிகர் மனோஜ் மித்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்