மோகன்லாலை சந்தித்த வெங்கட் பிரபு - 'தி கோட்' படத்தில் சிறப்பு வேடத்தில் நடிக்கிறாரா?
|வெங்கட் பிரபு , நடிகர் மோகன்லாலை சந்தித்தது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.
சென்னை,
இயக்குனர் வெங்கட்பிரபு தற்போது நடிகர் விஜய் நடித்துள்ள 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (தி கோட்) திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, யோகிபாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்பட பலர் நடித்துள்ளனர்.
ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.சமீபத்தில் 'தி கோட்' படத்தின் டிரைலர் வெளியானது. கோட் திரைப்படம் அடுத்த மாதம் 5-ம் தேதி வெளியாக உள்ளநிலையில், இப்படத்தின் 4வது பாடல் நாளை வெளியாக இருக்கிறது.
இந்நிலையில், இயக்குனர் வெங்கட் பிரபு , நடிகர் மோகன்லாலை சந்தித்தது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனைபார்த்த ரசிகர்கள், மோகன்லால் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஆனால், மோகன்லால் 'தி கோட்' படத்தில் சிறப்பு வேடத்தில் நடிக்கவில்லை என்றும், பரோஸ் படத்தின் போஸ்ட் புரொடக்சனின்போது சென்னையில் இருவரும் சந்தித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. நடிகர் மோகன்லால் நடித்துள்ள பரோஸ் திரைப்படம் வருகிற அக்டோபர் 3-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.