'கோட்' பட பர்ஸ்ட் லுக் மேக்கிங் புகைப்படத்தை பகிர்ந்த வெங்கட் பிரபு
|இயக்குனர் வெங்கட் பிரபு 'கோட்' படத்தின் பர்ஸ்ட் லுக் மேக்கிங் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
சென்னை,
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் படம் 'கோட்'. இப்படத்தில், முன்னாள் தமிழ் சினிமாவில் ஹீரோக்களாக பல ஹிட் படங்களை கொடுத்த மோகன், பிரசாந்த், பிரபு தேவா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.
அதேபோல் டாப் ஹீரோயின்களாக வலம் வந்த சிநேகா, லைலாவும் படத்தில் நடிக்கிறார்கள். புதுமுக நடிகையான மீனாட்சி சவுத்ரி கதையின் நாயகியாக நடித்து வருகிறார். ஜெயராம், யோகி பாபு, வைபவ், பிரேம்ஜி உள்பட வெங்கட் பிரபுவின் படத்தில் வழக்கமாக நடிக்கும் நடிகர்கள் பலரும் நடித்து வருகிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது கேரளாவில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
நடிகர் விஜய் கேரளாவுக்கு சென்றதில் இருந்தே ரசிகர்கள் அவரைக் காண கூட்டமாக அலைமோதி வருகின்றனர். கடந்த மூன்று நாட்களாக நடிகர் விஜய்யை பார்க்க படப்பிடிப்பு தளத்திலும், செல்லும் இடங்களிலும் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.
இந்நிலையில், இயக்குனர் வெங்கட் பிரபு 'கோட்' படத்தின் பர்ஸ்ட் லுக் மேக்கிங் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.