மாநாடு படத்தின் போஸ்டர் டிசைனை பயன்படுத்திய ஹாலிவுட் சீரிஸ்
|மாநாடு படத்தின் போஸ்டர் டிசைனை தற்போது ஹாலிவுட் சீரிஸ் ஒன்றில் பயன்படுத்தி இருப்பதாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருக்கிறது
சென்னை,
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'மாநாடு'. இந்த திரைப்படம் தொடர் தோல்வி படங்களால் துவண்டு இருந்த சிம்புவிற்கு திருப்புமுனையாக அமைந்தது. இப்படத்தில் சிம்புவுடன் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, மனோஜ் பாரதிராஜா, பிரேம்ஜி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.
டைம் லூப் கதையம்சம் கொண்ட இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. வசூல் ரீதியாகவும் இந்த படம் மிகப்பெரிய சாதனை படைத்தது.
இந்நிலையில், மாநாடு படத்தின் போஸ்டர் டிசைனை தற்போது ஹாலிவுட் சீரிஸ் ஒன்றில் பயன்படுத்தி இருப்பதாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருக்கிறது. இந்நிலையில் வெங்கட் பிரபு, மாநாடு பட போஸ்டர் டிசைன் செய்தவரின் பெயரை குறிப்பிட்டு அவரை பாராட்டி இணையத்தில் பதிவிட்டிருக்கிறார்.
இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில் 'நீங்கள் ஒரு மந்திரவாதி' என்று தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.