'தளபதி-68' படத்தில் சிறப்பாக இசையமைக்க வேண்டும் - யுவன் சங்கர் ராஜாவை வாழ்த்திய வெங்கட் பிரபு
|நடிகர் விஜய்யின் 68-வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க உள்ளார்.
சென்னை,
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு அவரது ரசிகர்களும், திரைப் பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் வெங்கட் பிரபு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வெங்கட் பிரபு, "தம்பி யுவன் சங்கர் ராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். தளபதி-68 படத்தில் சிறப்பாக இசையமைக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார். நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜின் 'லியோ' படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இதைத்தொடந்து விஜய்யின் 68-வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார். கல்பாத்தி எஸ்.அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Happy bday Thambi @thisisysr waiting for u to rock #Thalapathy68
— venkat prabhu (@vp_offl) August 31, 2023 ">Also Read: