< Back
சினிமா செய்திகள்
சிம்பு நடித்த வெந்து தணிந்த காடு படம் தியேட்டர்களில் வெளியானது
சினிமா செய்திகள்

சிம்பு நடித்த 'வெந்து தணிந்த காடு' படம் தியேட்டர்களில் வெளியானது

தினத்தந்தி
|
15 Sept 2022 7:08 AM IST

நடிகர் சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கியுள்ள வெந்து தணிந்தது காடும் திரைப்படம் தியேட்டர்களில் இன்று வெளியானது.

சென்னை,

கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'வெந்து தணிந்தது காடு' படத்தில் சிம்பு நடித்து முடித்துள்ளார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இதற்குமுன் இந்த கூட்டணியில் வெளியான 'விண்ணைத் தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' ஆகிய படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இதனால், ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தில் கதாநாயகிகளாக கயாடு லோகர் மற்றும் சித்தி இட்னானி நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் இன்று காலை திரையரங்குகளில் வெளியானது.

மேலும் செய்திகள்