< Back
சினிமா செய்திகள்
மீண்டும் பேய் படத்தில் வெற்றி
சினிமா செய்திகள்

மீண்டும் பேய் படத்தில் 'வெற்றி'

தினத்தந்தி
|
3 March 2023 10:41 AM IST

ஏற்கனவே திகில் படங்களில் நடித்துள்ள வெற்றி தற்போது `இரவு' என்ற புதிய பேய் படத்திலும் நடித்துள்ளார். நாயகியாக ஆர்யா செல்வராஜ் வருகிறார். இவர் மலேசியாவை சேர்ந்தவர். இந்த படத்தை ஜெகதீசன் சுபு டைரக்டு செய்கிறார்.

படம் பற்றி அவர் கூறும்போது, ``நாயகன் வெற்றி, கேம் உருவாக்கும் சாப்ட்வேர் என்ஜினீயராகவும் நாயகி `ஹேர் ஸ்டைலிட்' ஆகவும் வருகிறார்கள். வெற்றிக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. ஒரு விருந்து நிகழ்ச்சிக்கு செல்லும்போது நாயகனுக்கு நிஜம் எது? கற்பனை எது? என்று புரியாத இல்யூஷனில் சிக்குகிறார். இதனால் அவர் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதை திரில்லர் கதையம்சத்தில் உருவாக்கி உள்ளோம். படத்தில் பேயும் இருக்கும். நாயகன் வெற்றி `8 தோட்டாக்கள்', `ஜீவி' போன்ற திகில் கதைகளில் நடித்துள்ளார்.

அந்த படங்கள் மாதிரியே இதுவும் இதுவரை வராத வித்தியாசமான கதைகளத்தில் உருவாகிறது'' என்றார். இவர் ஏற்கனவே சிகை, பக்ரீத் ஆகிய படங்களை இயக்கி உள்ளார். இசை: எல்.வி.முத்துக் கணேஷ், 10 எம் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது.

மேலும் செய்திகள்