< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
வேதிகா, யோகி பாபு நடித்துள்ள 'கஜானா' படத்தின் பாடல் வெளியீடு
|13 April 2024 9:55 PM IST
'கஜானா' படத்தை போர் ஸ்கொயர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
சென்னை,
இயக்குனர் பிரபதிஷ் சாம்ஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள பேண்டசி அட்வென்ச்சர் திரைப்படம் 'கஜானா'. போர் ஸ்கொயர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் வேதிகா, யோகி பாபு, இனிகோ பிரபாகரன், சாந்தினி, ஹரீஷ் பேரடி, பிரதாப் போத்தன், சென்ட்ராயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்துக்கு அச்சு ராஜாமணி இசையமைத்துள்ளார். கோபி துரைசாமி, வினோத் ஜே.பி ஒளிப்பதிவு செய்துள்ளனர். கே.எம்.ரியாஸ் படத்தொகுப்பு செய்துள்ளார். காட்டுக்குள் பயணம் செய்யும் ஒரு குழு எதிர்கொள்ளும் அமானுஷ்யங்களின் தொகுப்பாக இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.
சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் 'எரியும் தீப்பிழம்பு' என்ற பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.