< Back
சினிமா செய்திகள்
கவர்ச்சியில் கலக்கும் வேதிகா - புகைப்படம் வைரல்

image courtecy: instagram@vedhika4u

சினிமா செய்திகள்

கவர்ச்சியில் கலக்கும் வேதிகா - புகைப்படம் வைரல்

தினத்தந்தி
|
21 April 2024 7:31 AM IST

வேதிகா தனது கவர்ச்சி படங்களை அவ்வப்போது வெளியிட்டு கவனம் ஈர்த்து வருகிறார்.

சென்னை,

'முனி', 'சக்கரகட்டி', 'காளை', 'பரதேசி', 'காவிய தலைவன்', 'காஞ்சனா-3' உள்ளிட்ட படங்களில் நடித்தவர், வேதிகா. 'காளை' படத்தில் 'குட்டி பிசாசே... குட்டி பிசாசே...' என்ற பாடலுக்கு சிம்புவுடன் இவர் ஆடிய நடனம் ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டது.

தற்போது படங்களில் பிசியாக நடித்து வரும் வேதிகா, தனது கலக்கல் கவர்ச்சி படங்களை அவ்வப்போது வெளியிட்டு கவனம் ஈர்த்து வருகிறார். அந்தவகையில் அவரது சமீபத்திய கவர்ச்சி படங்கள் வைரலாகி வருகின்றன. இந்த படங்களை பார்த்து வேதிகாவின் அழகை ரசிகர்கள் புகழ்ந்து வருகிறார்கள். வேதிகா தற்போது தமிழில் 'பேட்டாராப்', 'வினோதன்', 'ஜங்கிள்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர மலையாளம், தெலுங்கிலும் படங்கள் கைவசம் வைத்திருக்கிறார்.

வெண்ணை கட்டி தேகம் கொண்ட வேதிகா, 'காஞ்சனா-3' படத்தில் பேயிடம் அடிவாங்கி சொல்லும் 'ஓம் சக்தி... பராசக்தி...' வசனத்தை, ஏராளமான குழந்தைகள் சொல்லி நடித்து 'ரீல்ஸ்' வெளியிட்டும் மகிழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்