< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்

'பேட்ட ராப்' படத்தின் 'வச்சு செய்யுதே' வீடியோ பாடல் வெளியானது

தினத்தந்தி
|
16 Sept 2024 3:18 PM IST

எஸ்.ஜே.சினு இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள 'பேட்ட ராப்' படத்தின் ‘வச்சு செய்யுதே’ வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.

சென்னை,

தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குனராகவும், நடன இயக்குனராகவும் வலம் வருபவர் பிரபு தேவா. இவர் தற்போது விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'தி கோட்' திரைப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இதற்கிடையில் எஸ்.ஜே.சினு இயக்கத்தில் பிரபுதேவா நடித்திருக்கும் புதிய திரைப்படம் 'பேட்ட ராப்'. இந்த படத்தில் கதாநாயகியாக வேதிகா நடித்துள்ளார்.

இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். மேலும் விவேக் பிரசன்னா, பகவதி பெருமாள், ரமேஷ் திலக், கலாபவன் ஷாஜோன், மைம் கோபி, ரியாஸ் கான் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஜூன் மாதம் புதுச்சேரியில் தொடங்கி சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் நடைபெற்றது. ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ப்ளூ ஹில் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஜோபி பி. சாம் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் மோசன் போஸ்டர், இரண்டு பாடல்கள் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. படத்தில் இடம் பெற்றுள்ள 'டான்ஸ் டான்ஸ்' வீடியோ பாடல் வெளியாகி வைரலானது.

இந்தநிலையில் படத்தில் இடம் பெற்றுள்ள 'வச்சு செய்யுதே' வீடியோ பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இப்பாடலில் பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் நடனமாடியுள்ளார். பாடல் மிக கலர்புல்லாகவும், சன்னி லியோனின் நடனம் மிக அழகாகவும் அமைந்துள்ளது.

இந்த திரைப்படம் வருகிற 27-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

மேலும் செய்திகள்