< Back
சினிமா செய்திகள்
விஜய் தேவரகொண்டா 12வது திரைப்படம்:  பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
சினிமா செய்திகள்

விஜய் தேவரகொண்டா 12வது திரைப்படம்: பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு

தினத்தந்தி
|
2 Aug 2024 5:06 PM IST

நடிகர் விஜய் தேவரகொண்டா நடிக்கும் 12வது திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகராக அறியப்பட்டார் விஜய் தேவரகொண்டா. இவரது 13வது திரைப்படம் குறித்த அறிவிப்பு கடந்த ஜூன் மாதத்தில் வெளியானது. 2019ல் தெலுங்கில் வெளியான 'ஜெர்ஸி' திரைப்படத்தின் இயக்குநர் கௌதம் தின்னானுரியின் திரைப்படத்தில் மீண்டும் இணைந்துள்ளார் விஜய் தேவரகொண்டா. நானி நடிப்பில் அனிருத் இசையில் வெளியான ஜெர்ஸி திரைப்படம் தேசிய விருது வென்றது குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் சமீபத்தில் இலங்கையில் துவங்கியுள்ளது. இந்தப் படப்பிடிப்பில் விஜய் தேவரகொண்டா கலந்துகொண்டதும் குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் 13-வது படமென அறிவித்த "பேமிலி ஸ்டார்" வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது. விஜய் தேவரகொண்டா நடிக்கும் 12வது திரைப்படத்தின் பிரபல கன்னட நடிகை ருக்மணி வசந்த் நடிக்கிறார். இவர் தற்போது தமிழில் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், சசிகுமார் உடன் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இந்தப்படம் 2025 மார்ச் மாதம் 28-ம் நாள் வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது. மேலும் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தின் பெயர் இந்த மாதம் அறிவிக்கப்படுமென படக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்