< Back
சினிமா செய்திகள்
வாழை படம் பார்த்துவிட்டு மாரி செல்வராஜை முத்தமிட்டு பாராட்டிய இயக்குநர் பாலா
சினிமா செய்திகள்

'வாழை' படம் பார்த்துவிட்டு மாரி செல்வராஜை முத்தமிட்டு பாராட்டிய இயக்குநர் பாலா

தினத்தந்தி
|
22 Aug 2024 8:25 PM IST

இயக்குநர் மாரி செல்வராஜின் ‘வாழை’ படத்தை பார்த்துவிட்டு இயக்குநர் பாலா அவரை கட்டியணைத்து முத்தமிட்டு பாராட்டியுள்ளார்.

சென்னை,

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம் 'வாழை'. இந்த படத்துக்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தில் நடிகர் கலையரசன் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் நிகிலா விமல், திவ்யா துரைசாமி, 'வெயில்' படம் மூலம் பிரபலமான பிரியங்கா மற்றும் சில சிறுவர்கள் நடித்துள்ளனர்.சமீபத்தில், 'வாழை' படத்தின் இரண்டு பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி கவனம் பெற்றன. நாளை இப்படம் வெளியாக உள்ளநிலையில், சமீபத்தில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் வாழை படத்தின் முன் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் தயாரிப்பாளர் தாணு, இயக்குநர்கள் ரஞ்சித், வெற்றிமாறன், சசி, மிஷ்கின், அருண் மாதேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

வாழை படத்தை பார்த்து விட்டு வெளியே வந்த இயக்குநர் பாலா, மாரிசெல்வராஜை கட்டியணைத்து கன்னத்தில் முத்தம் கொடுத்தார். பின்பு சிறிது நேரம் மாரி செல்வராஜ் பக்கத்தில் அமர்ந்த பாலா தன்னை ஆசுவாசப்படுத்தினார். படம் பார்த்து நீண்ட நேரமாக பேச வார்த்தை இல்லாமல் பாலா மாரி செல்வராஜின் கைகளை பிடித்துக் கொண்டு உட்கார்ந்துவிட்டு சென்றார். இயக்குநர் பாலா வாழை படத்தைப் பார்த்தபின் இயக்குநர் மாரி செல்வராஜை கட்டி அனைத்து முத்தமிட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் மாரி செல்வராஜுக்கு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். நடிகர் சிவகார்த்திகேயன், சிலம்பரசன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோர் படம் குறித்து தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்தினர்.

மேலும் செய்திகள்