ரீ-ரிலீஸ் ஆகும் "வசந்த மாளிகை"
|வசந்த மாளிகை திரைப்படம் நாளை ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் 1972ம் ஆண்டு செப்டம்பர் 29ந் தேதி வெளியான திரைப்படம் "வசந்த மாளிகை". இந்த படத்தில் வாணிஸ்ரீ, நாகேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். கே.எஸ்.பிரகாஷ்ராவ் இயக்கிய இந்தப் படத்துக்கு கே.வி.மகாதேவன் இசை அமைத்திருந்தார். பாடல்களை கண்ணதாசன் எழுதியிருந்தார்.
காதலுக்கு முக்கியத்துவம் அளித்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தின் பாடல்கள் தற்போது வரை ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. இந்த திரைப்படம் வெளியாகி 50 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளது. இதை கொண்டாடும் விதமாக நாளை (ஜூலை 21, வெள்ளிகிழமை) இந்த திரைப்படம் டிஜிட்டல் தரத்தில் மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
முன்னதாக 2013 மற்றும் 2019ம் ஆண்டு இந்த திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் மீண்டும் நாளை வெளியாகிறது.