பிரபல ஓடிடியில் வெளியாகிறதா வருண் தேஜ் - லாவண்யா திருமண வீடியோ...?
|வருண் தேஜ் - லாவண்யா திருமணம் கடந்த 1ம் தேதி இத்தாலியில் பிரமாண்டமாக நடைபெற்றது.
ஐதராபாத்,
சசிகுமார் நடித்த பிரம்மன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர், லாவண்யா திரிபாதி. இவரும், தெலுங்கு நடிகர் வருண் தேஜூம் காதலித்து வந்தனர். இருவரும் 'மிஸ்டர்', 'அந்தாரிக்சம்' ஆகிய படங்களில் இணைந்து நடித்திருந்தனர். அப்போது காதல் மலர்ந்தது.
இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில் இருவீட்டாரின் சம்மதத்துடன் கடந்த நவம்பர் 1ம் தேதி இத்தாலியில் மிகவும் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமண வைபவத்தில் சிரஞ்சீவி, ராம் சரண், அல்லு அர்ஜூன், பவன் கல்யாண் உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து நேற்று ஐதராபாத்தில் இவர்களின் வரவேற்பு நிகழ்ச்சி மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்விலும் ஏராளமான திரை நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் இவர்களின் திருமண விடியோ நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான உரிமையை ரூ. 8 கோடிக்கு விற்பனை செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து வருண் தேஜ் - லாவண்யா தரப்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண வீடியோவின் ஒளிபரப்பு உரிமையை நெட்பிளிக்ஸ் பெற்றிருந்தது. ஆனால் அதற்கான ஒப்பந்தம் நிலுவையில் உள்ளதால் தற்போதுவரை திருமண வீடியோ வெளியாகவில்லை.