< Back
சினிமா செய்திகள்
இத்தாலியில் பிரமாண்டமாக நடைபெற்ற வருண் தேஜ் - லாவண்யா திருமணம்
சினிமா செய்திகள்

இத்தாலியில் பிரமாண்டமாக நடைபெற்ற வருண் தேஜ் - லாவண்யா திருமணம்

தினத்தந்தி
|
2 Nov 2023 11:38 AM IST

மணமக்கள் அழகாக தரையில் அமர்ந்துகொண்டு எடுத்த புகைப்படம் மற்றும் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்பட்டு வருகின்றன.

சென்னை,

தெலுங்கு நடிகர் வருண் தேஜ் மற்றும் நடிகை லாவண்யா திரிபாதியின் நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் சில மாதங்களுக்கு முன்பாக கோலாகலமாக நடைபெற்ற நிலையில், அவர்களது திருமணம் இத்தாலியில் பிரம்மாண்டமாக நேற்று இரவு நடைபெற்றது. திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

நடிகர் சிரஞ்சீவியின் உறவினர் திருமணம் என்பதால் நடிகர்கள் சிரஞ்சீவி, பவன் கல்யாண், ராம்சரண் மற்றும் அல்லு அர்ஜுன் உள்ளிட்ட டோலிவுட்டின் ஒட்டுமொத்த முன்னணி நடிகர்களும் இந்த திருமணத்தில் பங்கேற்றனர்.

அவர்களுடன் மணமக்கள் அழகாக தரையில் அமர்ந்துகொண்டு எடுத்த புகைப்படம் மற்றும் திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்பட்டு வருகின்றன.

லாவண்யா திரிபாதி தமிழில் பிரம்மன், மாயவன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நிலையில், கோலிவுட் ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் இந்த நட்சத்திர ஜோடிக்கு திருமண வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்