அட்லியின் 'பேபி ஜான்' ரிலீஸ் தேதி அறிவிப்பு!
|பேபி ஜான் திரைப்படம் டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் அன்று வெளியிடுவதாக படக்குழு அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.
ஷங்கரின் உதவி இயக்குநராக அறிமுகமாகி, இன்று பல ஹிட் படங்களை இயக்கி வருபவர் பிரபல இயக்குனர் அட்லி. இவர் 'ஜவான்' படம் மூலம் பாலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானார். இப்படம் ரூ.1,000 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்தது. தற்போது பாலிவுட்டில் அட்லி மற்றும் அவரது மனைவி பிரியாவின் ஏ பார் ஆப்பிள் ஸ்டுடியோஸ், ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் முராத் கெதானியின் சினி-1 ஸ்டுடியோஸ் ஆகியவை இணைந்து "பேபி ஜான்" என்ற படத்தை தயாரித்துள்ளன.
கடந்த 2016-ம் ஆண்டு விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவான திரைப்படம் 'தெறி'. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படம் ஹிந்தியில் தற்போது உருவாகி வருகிறது.
அட்லியின் உதவி இயக்குனர்களில் ஒருவரான காலிஸ் என்பவர் இயக்கி வரும் இந்த படத்தில் விஜய் நடித்த வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிக்கிறார். இந்த படத்தின் நாயகிகளாக கீர்த்தி சுரேஷ் மற்றும் வாமிகா கபி ஆகியோர் நடித்து வருகின்றனர். மைக்கேல் படத்தின் ஒளிப்பதிவாளர் கிரண் கௌஷிக் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்.
"பேபி ஜான்" என தலைப்பிடப்பட்ட இந்த படம் மே 31-ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சில பணிகள் முடியாத காரணத்தால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. இதையடுத்து படம் கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு டிசம்பர் 25 -ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
"இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் மகிழ்ச்சியாக இருக்கபோகிறது, உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்" என்று ஜியோ ஸ்டுடியோஸ் சமூக வலைத்தளத்தில் படத்தின் புதிய போஸ்டரை பதிவிட்டுள்ளது.