< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
'லவ் டுடே' படம் இந்தி ரீமேக்கில் வருண் தவான்
|3 Jan 2023 7:26 AM IST
‘லவ் டுடே' இந்தி ரீமேக்கில் பிரதீப் ரங்கநாதன் கதாபாத்திரத்தில் நடிக்க வருண் தவானிடன் படக்குழுவினர் பேசி வருகிறார்கள்.
கடந்த வருடம் வெளியான 'லவ் டுடே' படத்தின் வெற்றி திரையுலகினரை ஆச்சரியப்படுத்தியது. சுமார் ரூ.6 கோடி பட்ஜெட்டில் தயாரான இந்த படம் ரூ.70 கோடிக்கு மேல் வசூல் குவித்தது. இதில் பிரதீப் ரங்கநாதன் நடித்து டைரக்டு செய்து இருந்தார். நாயகியாக இவானா நடித்து இருந்தார். இவர்களுடன் சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகியாபு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வந்தனர்.
இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவும் முயற்சிகள் நடக்கின்றன. இந்த நிலையில் லவ் டுடே படத்தின் வெற்றி மற்ற மொழியினரையும் கவனிக்க வைத்துள்ளது. இதையடுத்து இந்தியில் லவ் டுடே ரீமேக் ஆக உள்ளது. இந்தி ரீமேக் உரிமை பெரிய தொகைக்கு விலைபோய் உள்ளது. 'லவ் டுடே' இந்தி ரீமேக்கில் பிரதீப் ரங்கநாதன் கதாபாத்திரத்தில் நடிக்க வருண் தவான் பெயர் அடிபடுகிறது. அவரிடம் படக்குழுவினர் பேசி வருகிறார்கள்.