< Back
சினிமா செய்திகள்
உலக புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் பிகில் பட நடிகையின் படம்

image courtecy:instagram@varshabollamma

சினிமா செய்திகள்

உலக புகழ்பெற்ற 'கேன்ஸ்' திரைப்பட விழாவில் 'பிகில்' பட நடிகையின் படம்

தினத்தந்தி
|
13 May 2024 11:19 AM IST

உலக புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா வருகிற 17ம் தேதி முதல் 20ம் தேதி வரை பிரான்ஸ் நாட்டில் நடைபெறவிருக்கிறது.

சென்னை,

உலக புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா வருகிற 17ம் தேதி முதல் முதல் 20ம் தேதி வரை பிரான்ஸ் நாட்டில் நடைபெறவிருக்கிறது. இதில் 140 நாடுகளிலிருந்து திரைப்பட கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இந்நிலையில், இவ்விழாவில் திரையிட 'பிகில்' படத்தில் நடித்திருந்த வர்ஷா பொல்லம்மாவின் படம் தேர்வாகி இருக்கிறது. விஜய் நடிப்பில் வெளியான 'பிகில்' படத்தில் நடித்த வர்ஷா பொல்லம்மா, தற்போது முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'இருவம்'. இது இந்தியாவின் முதல் 'லைவ் ஆக்சன் கேம்' திரைப்படமாகும்.

தற்போது இந்த படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகி உள்ளது. இது 'லெட்ஸ் ஸ்பூக் கேன்ஸ்' என்ற பிரிவில் திரையிடப்பட உள்ளது. இதைப்பற்றி வர்ஷா பொல்லம்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

வர்ஷா பொல்லம்மா,விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான '96' படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்