< Back
சினிமா செய்திகள்
தீபாவளிக்கு வெளியாகிறது வாரிசு படத்தின் முதல் பாடல் - ரசிகர்கள் உற்சாகம்
சினிமா செய்திகள்

தீபாவளிக்கு வெளியாகிறது 'வாரிசு' படத்தின் முதல் பாடல் - ரசிகர்கள் உற்சாகம்

தினத்தந்தி
|
19 Oct 2022 2:53 PM IST

வாரிசு படத்தின் முதல் பாடல் தீபாவளிக்கு வெளியாகும் என இசையமைப்பாளர் தமன் தெரிவித்துள்ளார்

சென்னை,

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த மாத இறுதிக்குள் இதன் முழு படப்பிடிப்பும் முடிவடைந்துவிடும் எனக் கூறப்படுகிறது. மேலும், 'வாரிசு' திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், வாரிசு படத்தின் முதல் பாடல் குறித்த புதிய தகவல் இசையமைப்பாளர் தமன் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமன் வாரிசு படத்தின் முதல் பாடல் தீபாவளிக்கு வெளியாகும் என தெரிவித்துள்ளார்.இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Related Tags :
மேலும் செய்திகள்