"எனக்கு போட்டி நான் தான்" எப்படி இருக்கு...! முதலிடம் பிடிக்குமா வாரிசு டிரைலர்...!
|தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் டிரைலர் வெளியிடப்பட்டு உள்ளது. 2 நிமிடம் 28 செகண்டுக்கான டிரைலர் வெளியிடப்பட்டு உள்ளது.
சென்னை
பொங்கல் விருந்தாக திரைக்கு வர உள்ள இப்படத்திற்கு போட்டியாக அஜித்தின் துணிவு படமும் ரிலீசாக உள்ளது. இதனால் இரண்டு படங்களும் போட்டி போட்டி அப்டேட்டுகளை வெளியிட்டு வருகின்றனர். அதன்படி கடந்த வாரம் துணிவு படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. அதன் டிரைலருக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்து இருந்தன.
இந்நிலையில், அதற்கு போட்டியாக தற்போது விஜய் நடித்துள்ள வாரிசு படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டு உள்ளது. காமெடி, ஆக்ஷன், செண்டிமென்ட் என அனைத்தும் கலந்த கலவையாக வெளியாகி உள்ள இந்த டிரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. வரும் 12-ம் தேதி ரிலீஸ் ஆகும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து உள்ளார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் 'ரஞ்சிதமே' மற்றும் 'தீ தளபதி', 'சோல் ஆப் வாரிசு' பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று பெரிய ஹிட் அடித்தது. இந்நிலையில்,வாரிசு படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியானது.தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் டிரைலர் வெளியிடப்பட்டு உள்ளது. 2 நிமிடம் 28 செகண்டுக்கான டிரைலர் வெளியிடப்பட்டு உள்ளது.
தற்போது சினிமா ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனமும் விஜய்யின் வாரிசு பட டிரைலர் பக்கம் திரும்பி உள்ளது.
எனக்கு போட்டி நான் தான் என ஆடியோ லாஞ்சில் விஜய் பேசியிருந்தார். அதன்படியே பீஸ்ட் பட சாதனையை அவரின் வாரிசு படம் முறியடிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
சென்னை ரோகிணி தியேட்டரில் மட்டுமின்றி தமிழ்நாட்டில் உள்ள பல திரையரங்குகளில் வாரிசு படத்தின் டிரைலர் கொண்டாட்டத்திற்காக பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. வாரிசு டிரைலரை ரசிகர்கள் தியேட்டரில் பார்த்து வேறலெவல் வெறித்தனமாக கொண்டாடி வருகின்றனர்.
டிரைலர் முழுவதும் பஞ்ச் டயலாக் தான்.வாரிசு படம் சென்டிமென்ட் கலந்த குடும்ப படமாக இருந்தாலும் ஆக்ஷனில் கொஞ்சமும் ரசிகர்களுக்கு குறை வைக்காத வகையில் அதிரடியில் கலக்கி உள்ளார்.
"மாமே அன்போ அடியோ எனக்கு கொடுக்கும்போது யோசிச்சு கொடுக்கணும்"
"கிரவுண்ட் மொத்தம் உன் ஆளுங்க இருக்கலாம் - ஆனா
ஆடியன்ஸ் ஒருத்தன மட்டும் தான் பாப்பாங்க!" அவன்தான் தான் ஆட்ட நாயகன்
பவர் சீட்ல இருக்காது அதுல வந்து உட்காருன்ல ஒருத்தன்...!
'எல்லா இடமும் நம்ம இடம் தான்'