< Back
சினிமா செய்திகள்
வாரிசு - துணிவு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி...!
சினிமா செய்திகள்

வாரிசு - துணிவு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி...!

தினத்தந்தி
|
11 Jan 2023 10:25 PM IST

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாரிசு, துணிவு திரைப்படங்களுக்கு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

சென்னை,

தமிழ் சினிமாவில் கடந்த ஒரு மாதமாகவே அதிகம் உச்சரிக்கப்பட்ட பெயர் என்றால் அது துணிவு மற்றும் வாரிசு தான். இதில் அஜித் நாயகனாக நடித்துள்ள துணிவு எச்.வினோத்தும், விஜய் ஹீரோவாக நடித்திருக்கும் வாரிசு படத்தை வம்சியும் இயக்கி இருந்தனர்.

இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் இன்று வெளியானது. தமிழ்நாட்டில் துணிவு திரைப்படம் நள்ளிரவு சரியாக 1 மணிக்கு வெளியானது. வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் 'வாரிசு' திரைப்படம் அதிகாலை 4 மணிக்கு முதல்காட்சி வெளியாகியது. இரண்டுபடகளும் ஒரே நேரத்தில் வெளியானதால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 12, 13, 18 தேதிகளில் வாரிசு, துணிவு திரைப்படங்களுக்கு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-

பொங்கல் பண்டிகையை முன்னிட்னிட்டு திரையரங்குகளில் கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. திரைப்பட விநியோகஸ்தர்களின் கோரிக்கையை ஏற்று 12ம் தேதி , 13ம் தேதி மற்றும் ஜன.,18 ம் தேதி ஆகிய தேதிகளில் மட்டுமே வாரிசு, துணிவு திரைப்படங்களுக்கு சிறப்பு காட்சிகளுக்கான அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. 14ம் தேதி முதல் 17 ம் தேதி வரையி்ல் திரையரங்குகளில் 4 காட்சிகளுக்கு மட்டுமே அனுமதி உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்