தீபாவளிக்கு வெளியாகும் 'வாரிசு' படத்தின் பாடல் ?
|'வாரிசு' திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை,
வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் வாரிசு. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், 'வாரிசு' படத்தின் முதல் பாடல் தீபாவளி அன்று வெளியாகும் என கூறப்படுகிறது. மேலும், இசையமைப்பாளர் தமன் தனது சமூக வலைதளப்பக்கத்தில் தீபாவளி என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனால், உற்சாகமடைந்த ரசிகர்கள் தீபாவளி ஸ்பெஷல் ட்ரீட் என்று கமெண்ட் செய்து பதிவை வைரலாக்கி வருகின்றனர். 'வாரிசு' திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.