< Back
சினிமா செய்திகள்
வாரிசு திரைப்படம்  ஓடிடி தளத்தில் வெளியானது
சினிமா செய்திகள்

'வாரிசு' திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது

தினத்தந்தி
|
22 Feb 2023 10:50 AM GMT

'வாரிசு' அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது

சென்னை,

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படம், கடந்த மாதம் 11-ம் தேதி ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது.

இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 'வாரிசு' திரைப்படம் உலக அளவில் ரூ.300 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், 'வாரிசு' அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது

Related Tags :
மேலும் செய்திகள்