< Back
சினிமா செய்திகள்
குடும்பங்கள் கொண்டாடும் வாரிசு திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
சினிமா செய்திகள்

குடும்பங்கள் கொண்டாடும் வாரிசு திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

தினத்தந்தி
|
8 Jan 2023 1:10 PM IST

குடும்பங்கள் கொண்டாடும் வாரிசு திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியானது.

சென்னை,

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. அந்த டிரைலரை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வெகுவாக கொண்டாடி வருகின்றனர். 'வாரிசு' திரைப்படம் வருகிற ஜனவரி 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், வாரிசு படத்தின் புதிய போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. அதில் வாரிசு படத்தின் குடும்பத்தினருடன் விஜய் இருப்பது போன்று இடம்பெற்றுள்ளன. அந்த புகைப்படத்தை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

மேலும் செய்திகள்