< Back
சினிமா செய்திகள்
வாரிசு  திரைப்படம், பிப்ரவரி 22ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகவிருப்பதாக தகவல்
சினிமா செய்திகள்

'வாரிசு' திரைப்படம், பிப்ரவரி 22ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகவிருப்பதாக தகவல்

தினத்தந்தி
|
1 Feb 2023 10:38 PM IST

வாரிசு திரைப்படம், பிப்ரவரி 22ம் தேதி ஓடிடி தளத்தில்வெளியாகவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை,

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் 'வாரிசு'. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்பில் உருவான இப்படம் கடந்த 11-ஆம் தேதி ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் தெலுங்கு பதிப்பான 'வாரசுடு' கடந்த 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திரைப்படம் வசூலில் ரூ.250 கோடியை கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் , ஓடிடி தளத்தில் ,வாரிசு திரைப்படம், பிப்ரவரி 22ம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Tags :
மேலும் செய்திகள்