< Back
சினிமா செய்திகள்
உலகம் முழுவதும் ரூ.150 கோடி வசூலை கடந்து வாரிசு திரைப்படம் சாதனை
சினிமா செய்திகள்

உலகம் முழுவதும் ரூ.150 கோடி வசூலை கடந்து வாரிசு திரைப்படம் சாதனை

தினத்தந்தி
|
16 Jan 2023 10:30 PM IST

வெளியான ஐந்து நாட்களில் உலகம் முழுவதும் ரூ.150 கோடி வசூலை வாரிசு திரைப்படம் கடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

பொங்கல் விருந்தாக உலகம் முழுவதும் வாரிசு மற்றும் துணிவு படங்கள் வெளியாகின. தமிழ் திரைத்துறையின் இரண்டு மெகா ஸ்டார்களான அஜித் மற்றும் விஜய்யின் படங்கள் ஒரே நாளில் ஜனவரி 11 ஆம் தேதி ரிலீசாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தின. இரண்டு படங்களும் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூலில் ஜாக்பாட் அடித்துக் கொண்டிருக்கின்றன.

இதன்படி 11 ஆம் தேதி அதிகாலை 4 மணி முதல் வாரிசு திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது. நடிகர் விஜய்யின் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி 'வாரிசு' படத்தை இயக்கியுள்ளார். இதில் விஜயுடன் ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா எனப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர்.

தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவான இந்த படம் தெலுங்கில் கடந்த ஜனவரி மாதம் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இந்நிலையில் வெளியான ஐந்து நாட்களில் உலகம் முழுவதும் ரூ.150 கோடி வசூலை வாரிசு திரைப்படம் கடந்துள்ளதாக படக்குழு தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வாரிசு படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ வெளியிட்டது. பொங்கல் விடுமுறை என்பதால் வாரிசு மற்றும் துணிவு படங்களுக்கு மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக மாலை காட்சிகளுக்கு அதிக வரவேற்பு இருப்பதாக கூறப்படுகிறது.



மேலும் செய்திகள்