'என் பார்வையில் அவர் அழகானவர்' - விமர்சனங்களுக்கு பதிலளித்த வரலட்சுமி சரத்குமார்
|சமீபத்தில், வரலட்சுமி சரத்குமாருக்கும், மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் நிகோலய் சச்தேவுக்கும் திருமண நிச்சயதார்த்த விழா நடைபெற்றது.
சென்னை,
'போடா போடி' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தவர் வரலட்சுமி சரத்குமார். தொடர்ந்து 'தாரை தப்பட்டை', 'விக்ரம் வேதா', 'சண்டக்கோழி-2', 'சர்க்கார்', 'மாரி-2', உள்ளிட்ட பல படங்களில் வரலட்சுமி நடித்துள்ளார். மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் அவர் நடித்துள்ளார்.
சமீபத்தில், வரலட்சுமி சரத்குமாருக்கும், மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் நிகோலய் சச்தேவுக்கும் திருமண நிச்சயதார்த்த விழா நடைபெற்றது. இந்த ஆண்டு திருமணம் நடைபெறும் என்றும், திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வரலட்சுமி - நிகோலஸ் சச்தேவ் ஜோடிக்கு திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும், சிலர் இந்த ஜோடியை விமர்சித்தும் வருகின்றனர்.
இந்நிலையில், இந்த விமர்சனத்திற்கு வரலட்சுமி சரத்குமார் பதிலளித்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது,
என் தந்தை கூட இரண்டு முறை திருமணம் செய்து கொண்டார். அவர் மகிழ்ச்சியாக இருக்கிறார். நிக்கை பற்றி மக்கள் எப்படி பேசுகிறார்கள் என்பதை நான் பார்த்திருக்கிறேன், அவர் என் பார்வையில் அழகாக இருக்கிறார். எங்களை பற்றி எதிர்மறையான கருத்துகளை வெளியிடுபவர்களைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. நான் எதற்காக அதற்கு பதில் சொல்ல வேண்டும்?. நிக்கின் பெற்றோர் ஆர்ட் கேலரியை நடத்துகிறார்கள். அவரும் அவரது மகளும் பவர் லிப்டிங்கில் தங்கப் பதக்கம் வென்றவர்கள். எல்லாம் நன்றாக இருக்கிறது, இவ்வாறு பேசினார்.