வரலட்சுமி - நிகோலய் திருமண புகைப்படங்கள் வைரல்
|வரலட்சுமி - நிகோலய் திருமண புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
சென்னை,
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வரும் வரலட்சுமி சரத்குமார், கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைக்களங்களை தேர்ந்தெடுத்து இமேஜ் பற்றியெல்லாம் கவலைப்படாமல் நடித்து வருகிறார். இதனால் இவருக்கு என்று தனியொரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இந்த சூழலில் வரலட்சுமி சரத்குமாரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்து முடிந்துள்ளது.
கடந்த மார்ச் 1ம் தேதி வரலட்சுமி சரத்குமாரின் நிச்சயதார்த்தம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் இன்ப அதிர்ச்சி அளித்தது. தொழில் அதிபரான நிகோலய் சச்தேவ் என்பவருடன் பெற்றோர்கள், நண்பர்கள், நெருங்கிய உறவினர்கள் மத்தியில் வரலட்சுமி சரத்குமார் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.
இதனையடுத்து வரலட்சுமி சரத்குமாரின் திருமணத்திற்கான ஏற்பாடு மும்முரமாக நடந்தது. முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடி, ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு நேரில் அழைப்பிதழ் வழங்கப்பட்டிருந்தது.
அதனைத்தொடர்ந்து, கடந்த 2-ம் தேதி இவர்களது திருமணம் தாய்லாந்தில் நடைபெற்றுள்ளது. இது குறித்தான புகைப்படங்கள் வெளியாகாமல் இருந்தநிலையில், தற்போது வரலட்சுமி - நிகோலய் திருமண புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.