< Back
சினிமா செய்திகள்
விருது பெற்ற கன்னட பட `ரீமேக்கில் வரலட்சுமி
சினிமா செய்திகள்

விருது பெற்ற கன்னட பட `ரீமேக்'கில் வரலட்சுமி

தினத்தந்தி
|
4 Nov 2022 10:23 AM IST

விருது பெற்ற கன்னட பட `ரீமேக்'கில் வரலட்சுமி சரத்குமார் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கிறார்.

கன்னடத்தில் வெளியான `கரால ராத்திரி' என்ற படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. இந்தப்படம் கன்னடத்தில் சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த துணை நடிகைக்கான கர்நாடக அரசின் விருதுகளையும் பெற்றது. 1981-ல் நடக்கும் திகில் கதையம்சத்தில் தயாராகி இருந்தது. இந்தப் படத்தை தெலுங்கிலும் `ரீமேக்' செய்தனர்.

தற்போது தமிழிலும் `கொன்றால் பாவம்' என்ற பெயரில் தயாள் பத்மநாபன் ரீமேக் செய்து இயக்குகிறார். இவர் கன்னடத்தில் 18 படங்களை இயக்கியவர். பிரதாப் கிருஷ்ணா, மனோஜ்குமார் ஆகியோர் தயாரிக்கும் இந்தப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், சந்தோஷ் பிரதாப் ஆகிய இருவரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஈஸ்வரி ராவ், சார்லி, மனோபாலா, ஜெயக்குமார், ராஜேந்திரன், சுப்பிரமணியம் சிவா, சென்றாயன் உள்ளிட்ட மேலும் பலர் நடிக்கின்றனர். செழியன் ஒளிப்பதிவு செய்கிறார். சாம் சி.எஸ். இசை யமைக்கிறார்.

மேலும் செய்திகள்