< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
வாணி போஜனின் புதிய பாதை
|22 July 2022 2:12 PM IST
தேவைப்படும் பட்சத்தில் கவர்ச்சியாக நடிக்கவும் தயார் என அறிவித்துள்ளார் வாணி போஜன்.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த கதாநாயகி வாணி போஜன். இவர் நடித்த 'ஓ மை கடவுளே...' நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத்தொடர்ந்து 'மலேசியா டூ நயன்தாரா', 'மகான்' உள்ளிட்ட படங்களிலும் நடித்தார்.
'மாடர்ன்' உடைகள் அணிந்தாலும் நாகரிகமாகவே படங்களில் தோன்றும் வாணி போஜனுக்கு, எதிர்பார்த்தபடி படவாய்ப்புகள் வரவில்லை. இதனால் நண்பர்கள் யோசனைப்படி புதிய பாதையில் இறங்க முடிவு செய்திருக்கிறார்.
'தேவைப்படும் பட்சத்தில் கவர்ச்சியாக நடிக்கவும் தயார்', என அவர் அறிவித்துள்ளார். வெப்-தொடர்களிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் லேசாக கவர்ச்சி காட்டும் தனது புகைப்படங்களையும் அவர் வெளியிட்டு இருந்தார்.
'வாணி போஜனுக்கு இப்போதாவது உலகம் புரிந்ததே...' என திரையுலகினர் கிசுகிசுத்து வருகிறார்கள்.