'புடவை கட்டினாலும் கவர்ச்சி என்று கூறுவதா?' வாணி போஜன் ஆதங்கம்
|கிளாமராக நடிப்பதில் தவறு இல்லை, ஆனால் அது எல்லை மீறக்கூடாது என கூறியுள்ளார் வாணி போஜன்.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த கதாநாயகி வாணி போஜன். அழகான நடிப்பு இருந்தபோதிலும், எதிர்பார்த்தபடி பட வாய்ப்புகள் இவருக்கு அமையவில்லை. இதையடுத்து தேவைப்படும் பட்சத்தில் கவர்ச்சியாக நடிக்க தயார் என வாணி போஜன் முடிவெடுத்தார். இதனைத்தொடர்ந்து தனது கவர்ச்சியான படங்களை அவர் தற்போது வெளியிட்டு வருகிறார். இதனையடுத்து பட வாய்ப்புகள் அவர் வீட்டு கதவை தட்ட தொடங்கியுள்ளன. இதனால் வாணி போஜன் உற்சாகமாகி இருக்கிறார். சமீபத்தில் வாணி போஜன் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது கவர்ச்சியாக நடிக்க முடிவு செய்தது குறித்து கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், ''கவர்ச்சியாக நடிப்பதில் தவறு இல்லை. ஆனால் அது எல்லை மீறக்கூடாது. நான் சாதாரண புடவை கட்டினாலும் கவர்ச்சி என்கிறார்கள். காலத்துக்கு ஏற்றபடி நம் சிந்தனையும் மாறவேண்டும்'' என்றார்.
'வாணி போஜன் திறமைசாலி தான். எடுத்த முடிவை எப்படி சூசகமாக சொல்லிவிட்டார் பாரேன்...' என திரை பிரபலங்கள் கிசுகிசுக்கிறார்கள்.
வாணிபோஜன் நடிப்பில் உருவாகியுள்ள தமிழ் ராக்கர்ஸ் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 19 ஆம் தேதி வெளியாக உள்ளது.