வந்தா மல... கவனம் ஈர்க்கும் 'சிங்கப்பூர் சலூன்' படத்தின் முதல் பாடல்..!
|'சிங்கப்பூர் சலூன்' திரைப்படம் வருகிற 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
சென்னை,
'ரவுத்திரம்', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', 'காஷ்மோரா' உள்ளிட்ட படங்களை இயக்கிய கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் 'சிங்கப்பூர் சலூன்'. இந்த படத்தில் ஆர்.ஜே.பாலாஜி சிகையலங்கார நிபுணராக நடிக்கிறார். இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஐசரி கே கணேஷ் தயாரிக்கிறார்.
இந்த படத்துக்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். விவேக் - மெர்வின் இசையமைக்கின்றனர். இந்த படத்தில் சத்யராஜ், லால், ரோபோ சங்கர், கிஷன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் வருகிற 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி 'வந்தா மல' என்ற பாடல் வெளியாகி உள்ளது. அறிவு, விவேக் சிவா எழுதியுள்ள இந்த பாடலை அறிவு, விவேக் சிவா, மெர்வின் சாலமன் இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.