< Back
சினிமா செய்திகள்
வணங்கான் படத்தின் டிரெய்லர் வெளியாகும் தேதி அறிவிப்பு
சினிமா செய்திகள்

'வணங்கான்' படத்தின் டிரெய்லர் வெளியாகும் தேதி அறிவிப்பு

தினத்தந்தி
|
6 July 2024 11:49 AM IST

விரைவில், 'வணங்கான்' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை,

பாலா இயக்கத்தில் உருவாகி வரும் படம் வணங்கான். படத்தில் முதலில் சூர்யா கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி பின்னர் சில காரணங்களால் படத்தில் இருந்து அவர் விலகினார். இதைத் தொடர்ந்து அவருக்கு பதிலாக அருண்விஜய் படத்தில் இணைந்து நடித்தார். சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் ஜி.வி. பிரகாஷ் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

வணங்கான் திரைப்படத்தில் அருண் விஜயுடன் இணைந்து ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஸ்கின், சாயா தேவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தில் நடிகர் அருண் விஜய் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது.

அதனைத்தொடர்ந்து, இத்திரைப்படம் இந்த மாதம் வெளியாகும் என தகவல் வெளியானது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வரும் 8-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. விரைவில், இப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்