< Back
சினிமா செய்திகள்
ஜென்டில்மேன் 2 படத்துக்கு பாடல் எழுதும் வைரமுத்து...!

Credits: twitter.com/@Vairamuthu

சினிமா செய்திகள்

'ஜென்டில்மேன் 2' படத்துக்கு பாடல் எழுதும் வைரமுத்து...!

தினத்தந்தி
|
8 Sept 2023 4:08 PM IST

ஜென்டில்மேன் 2-ம் பாகம் பட வேலைகள் தொடங்கி உள்ளன

கடந்த 1993-ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான 'ஜென்டில்மேன்' படம் பெரிய வெற்றி பெற்று வசூல் சாதனை நிகழ்த்தியது. இதில் அர்ஜூன், மதுபாலா, கவுண்டமணி, செந்தில், மனோரமா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

ஜென்டில்மேன் 2-ம் பாகம் விரைவில் உருவாகும் என்று தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் ஏற்கனவே அறிவித்திருந்தார். தற்போது பட வேலைகள் தொடங்கி உள்ளன. படத்துக்கு ஆஸ்கார் விருது வென்ற கீரவாணி இசையமைக்க உள்ளார். கோகுல் கிருஷ்ணா டைரக்டு செய்கிறார்.

இந்த படத்தின் பாடல்களை கவிஞர் வைரமுத்து எழுதுகிறார். இதுகுறித்து டுவிட்டரில் வைரமுத்து வெளியிட்டுள்ள பதிவில், "ஐதராபாத்தில் இருக்கிறேன். 'ஜென்டில்மேன் 2' படத்திற்கான பாடல் புனைவு நடந்து கொண்டிருக்கிறது. கே.டி.குஞ்சுமோனுக்கு வாக்களித்தபடி இந்த வாரம் மொத்தப் பாடல்களையும் முடித்துக்கொடுப்போம்.

கீரவாணியின் இசைக்கு வயது 20. நம் தமிழுக்கு வயது 18. காத்திருங்கள். ஒரு கலக்குக் கலக்கும் பாருங்கள்'' என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்