வடிவேலு நடித்துள்ள 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' திரைப்படத்தின் டிரைலர் வெளியானது
|தற்போது 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
சென்னை,
இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்'. இந்த படத்தில் 'குக் வித் கோமாளி' புகழ் சிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லைகா புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. இந்த நிலையில் தற்போது 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.'நாய் சேகர் ரிட்டன்ஸ்' திரைப்படம் வருகிற டிசம்பர் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Presenting the TRAILER of #NaaiSekarReturns
— Lyca Productions (@LycaProductions) December 1, 2022
▶️ https://t.co/hGgzZU0HiL
Witness the comic tale of India's 1st DOG Kidnapper at the cinemas on DEC 9! ✨#NaaiSekarReturnsOnDec9 ✨
Vaigai Puyal #Vadivelu ️ @Director_Suraaj @Music_Santhosh @thinkmusicindia pic.twitter.com/NW7PL3njGY