< Back
சினிமா செய்திகள்
சுந்தர்.சி.யின் பேய் படத்தில் வடிவேலு?
சினிமா செய்திகள்

சுந்தர்.சி.யின் பேய் படத்தில் வடிவேலு?

தினத்தந்தி
|
13 Jun 2024 2:22 PM IST

சுந்தர்.சி, வடிவேலு கூட்டணியில் வந்த 'தலைநகரம்', 'வின்னர்' ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றன.

சென்னை,

சுந்தர்.சி நடித்து இயக்கிய அரண்மனை 4 பேய் படம் சமீபத்தில் வெளியாகி வசூல் குவித்தது. இதையடுத்து மீண்டும் பேய் கதையொன்றை படமாக்க முடிவு செய்துள்ளார். இதில் சுந்தர்.சி நாயகனாகவும், தமன்னா நாயகியாகவும் நடிப்பார்கள் என்று தெரிகிறது. இந்த படத்தில் தன்னுடன் இணைந்து நடிக்க வடிவேலுவிடம் சுந்தர்.சி பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே சுந்தர்.சி. வடிவேலு கூட்டணியில் வந்த 'தலைநகரம்', 'வின்னர்' ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றன. குறிப்பாக இந்த படங்களில் வடிவேலுவின் நகைச்சுவை காட்சிகளுக்கு பாராட்டு கிடைத்தது. தற்போது மீண்டும் இருவரும் புதிய படத்தில் இணைய இருப்பதாக வெளியான தகவல் படத்துக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

சுந்தர்.சி ஏற்கனவே 'கலகலப்பு' படத்தின் இரண்டு பாகங்களை எடுத்துள்ளார். இந்த படத்தின் மூன்றாம் பாகத்தையும் உருவாக்க திட்டமிட்டு உள்ளார். 'கலகலப்பு 3' படத்தில் விமல், சிவா ஆகியோர் நடிப்பார்கள் என்று கூறப்படுகிறது. இதற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்